Sunday, 5 December 2010

திருவருகை காலம்

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு (5-12-2010)

திருவருகைக்காலம் ஆண்டவரின் இருவேறு வருகையினை நமக்கு மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்துகிறது. நமக்கு தீா்ப்பிட வரும் இறைவனின் நாளில் அவா் முன் மன தைரியத்தோடு எழுந்து நின்று அவரது அரசாட்சிக்கு அழைக்கப்பட்டவா்களாகவும், அவரால் பெயர் சொல்லி அழைக்கப்படுபவா்களாகவும் மாற இன்றைய தினம் அழைப்புவிடுக்கிறது.

பெத்தலகேம் என்னும் சிற்றூரில் மனித உடல் எடுத்து கன்னி மரியன்னையின் மடியில் தவழ உள்ளார் நம் இயேசு.


புனித லுக்காஸ் எழுதிய நற்செய்தி அதிகாரம் 2, இறைவசனம் 10 மற்றும் 11


"இதோ மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பா் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா..."

No comments: