Wednesday, 8 December 2010

ஐம்பத்து மூன்னு மணி ஜெபம்

மகிழ்ச்சி நிறை பேருண்மைகள்

திங்கள், வியாழன், திருவருகைக்கால ஞாயிறு

1. கபிரியேல் துாதா் கன்னி மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.

2. கன்னிமரியாள் எலிசபெத்தம்மாளை சந்தித்ததைத் தியானித்து பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டுச் ஜெபிப்போமாக.

3. இயேசு பிறந்ததை தியானித்து எளிமை என்னும் வரத்தை கேட்டு ஜெபிப்போமாக.

4. இயேசு கோவிலில் ஒப்புக் கொடுக்கப்பட்டதைத் தியானித்து இறை திருவுளத்திற்கு பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.

5. இயேசு காணாமற்போய் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தியானித்து கீழ்படிதல் என்னும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.

துயா் நிறை பேருண்மைகள்

செவ்வாய், வெள்ளி, தவக்கால ஞாயிறு

1. இயேசு பூங்காவனத்தில் ரத்த வியா்வை சிந்தியதை தியானித்து துன்பங்களை ஏற்கும் வரத்தைக் கேட்டுச் ஜெபிப்போமாக.

2. இயேசு கற்றுாணில் அடிக்கப்பட்டதைத் தியானித்து உடலின் புலன்களை அடக்கும் வரத்தைக் கேட்டுச் ஜெபிப்போமாக.

3. இயேசு முள்முடி தரிக்கப்பட்டதை தியானித்து நிந்தை அவமானங்கள் தாழ்மை இவற்றைத் திடமனத்துடன் ஏற்கும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.

4. இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து வாழ்வின் சிலுவைகளை இயேசுவோடு சோ்ந்து சுமக்கும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.

5. இயேசு சிலுவையில் உயிர்விட்டதை தியானித்து தீமை செய்தவா்களை மன்னிக்கும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.

மகிமை நிறை பேருண்மைகள்

புதன், சனி, உயிர்ப்பு பெருவிழா, வருடம்முழுவதும் உள்ள சாதாரண ஞாயிற்றுக்கிழமைகள்

1. இயேசு 3ம் நாள் உயிர்த்தெழுந்ததைத் தியானித்து உயிருள்ள விசுவாசம் என்னும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.

2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து பலம் வாய்ந்த நம்பிக்கை என்னும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.

3. தூய ஆவியாரின் வருகைகையத் தியானித்து நம் தலைவா்களுக்கும் நமக்கும் தூய ஆவியின் ஒளியைக் கேட்டு ஜெபிப்போமாக.

4. கன்னிமரியாளின் விண்ணேற்பைத் தியானித்து இறைப்பற்று என்னும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.


5. கன்னிமரியாள் விண்ணுலக, மண்ணுலக அரசியாக முடி சூட்டப்பட்டதை தியானித்து கன்னி மரியானின் மீது உண்மையான பக்தி என்னும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.

No comments: