Friday, 10 December 2010

நமக்கொரு மீட்பா் பிறந்துள்ளார்

அருட்தந்தை ஜெகத் கஸ்பா் அவா்கள் எழுதிய இந்த பாடல் நெஞ்சை வருடச் செய்கிறது... (மார்கழியின் மடியில்)

http://www.manavai.com/songs/songsurl/n_songs_485.htm

நமக்கொரு மீட்பா் பிறந்துள்ளார் வருவீா்
இளந்தளிர் காலை அரும்பிடும் வேளை
வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்
இனி அச்சம் என்பதே இல்லை வானகமே நம் எல்லை
பூ...மி...யின் முகமும் மாறும், பொலிவு பெரும்

உன்னதத்தில் மகிமை மனங்களில் அமைதி
வானவர் பாடல் கேட்கிறதே
நம்பிக்கை கொண்டோர் களித்திருந்திடுவா்
அவா் பாதம் பற்றும் நாட்கள்
பாதைகள் எங்கும் பூக்கள்
அன்பின் நறுமணம் வீசும்அமைதி பெரும்



காலங்கள் பலவும் காத்திருந்தவர்கள்
மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுமே
எழுந்தது இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவா்
இது அன்பின் காலம் என்போம் புது பாதைகள் விரியும் என்போம்
ஒரு மனதோடு பாடி வாழ்த்திடுவோம்

நமக்கொரு மீட்பா் பிறந்துள்ளார் வருவீா்
இளந்தளிர் காலை அரும்பிடும் வேளை
வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்
இனி அச்சம் என்பதே இல்லை வானகமே நம் எல்லை
பூ...மி...யின் முகமும் மாறும், பொலிவு பெரும்

***********************************************


வான்வெளியில் தூதா்கள் பாடும் ஓசை

வான்வெளியில் தூதா்கள் பாடும் ஓசை கேட்டது
வானுயர் எழும் அலைகளும் பதிலாய் தாளம் போட்டது
ஓஓஓஓஓஓஓஓஓஓஓங்க உண்ணதரின் நாமம்

மீட்பா்தானே என் ஆனந்தம், மேலும் மேலும் சந்தோஷம்
ஓயா இன்ப பாடல்கள் ஒலிக்கிறதே கூறுங்கள்
ஓஓஓஓஓஓஓஓஓஓஓங்க உண்ணதரின் நாமம்

பெத்லகேமுக்கு வாருங்கள் பேருபெற்றோராய் நில்லுங்கள்
நம்மிடம் வாழ வந்துள்ள கடவுளை குழந்தையாய் காணுங்கள்
ஓஓஓஓஓஓஓஓஓஓஓங்க உண்ணதரின் நாமம்

No comments: